Friday 8 May 2020

Library Events


"தொடு வானம் வரை" மிக மிக சிறப்பாக நடந்தது.
சுமார் 4 மாதங்கள் முன்னமே  திரு. ஈரோடு கதிர் அவர்களிடம் கோரிக்கை வைத்து, சம்மதம் வாங்கியும் ஏதோ சில பல காரணங்களால் தள்ளி போய், 21.01.16 என்று முடிவானது. தனிப்பட்ட முயற்சியாக இதை செய்வதால் கல்லூரி நிர்வாகத்திடம் நிதி எதிர்பார்க்க முடியாது. இவை அனைத்தும் கதிர் அவர்களிடம் முதல் உரையாடலில் சொல்லும் போதே, அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றார். தேதி முடிவான பின்பு, ரயில் டிக்கெட்  உட்பட தானே முன்பதிவு செய்து கொண்டார். பொதுவாக இதை போன்று வரும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரை அழைத்து வர கார் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. நிலைமையை நன்றாக புரிந்து கொண்டதால் என்னவோ, "பொம்மிடி ல இருந்து வர பைக் ஓகே வா? எனக் கேட்டவுடன், நீங்க ரொம்ப சிரமம் பட வேண்டாம், பைக் போதும் என்று சொன்னார். அன்று அவரை அழைத்து வர, பொம்மிடி யில் இருக்கும் வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவனை அழைத்து பொறுப்பை குடுத்தேன். அவன் " ஏனோ தானோ" என்று இருந்து விடுவான் எனத் தோணியதால்என்னவோ,ஐயா அவர்களை பற்றி எடுத்து சொல்லி, அவரின் முக நூல் பக்கம் எல்லாம் காட்டி, பாரு எவ்ளோ பெரிய பேச்சாளர நீ அழைத்து வர போறன்னு சொல்லி, சொதபிற மாட்ட இல்லராசா நு கேட்டா, அதெல்லாம் கவலையே படாதீங்க, சரியாக இருப்பேனு சொன்னான். 6 மணிக்கு பையன எழுப்பி விட்டாச்சி, 8 மணிக்கு கால் பண்ணி தம்பி  குளிச்சியா, சாப்டியா நு கேட்டு, சரியாய் 9 மணிக்கு நீ பொம்மிடி பிளாட்போறம் ல  அவர பார்த்து கூட்டி வர நு சொல்லிட்டு கல்லூரிக்கு போயாச்சி. மணி 9.20 கு கதிர் சார் கிட்ட இருந்து கால் வருது. நான் பொம்மிடி வந்து 15 நிமிடங்கள் ஆகுது. யாரும் வருல நு சொன்னாரு. அட டா , எத்துண தடவ சொன்னோம் நு, பயனுக்கு கால் பண்ணினா, போன் எடுகுல. சரி, ஆரம்பமே ரொம்ப நல்லா இருக்கு , நம்ம ராசி வேல செய்ய ஆரம்பிச்சிட்டது போல நு, நினைச்சிகிட்டேன். அது வர, ஏதும் உதவி வேணுமா நு கேட்காதவங்க, "  ஏங்க போயும் போயும் அவனா கிடைச்சான் உங்களுக்கு நு ஒரே நக்கல் வேற. மறுபடி கால் பண்ணினா, வண்டி பஞ்சர் ஆகிருச்சி மேடம், என்ன பண்ண, நான் வேற வண்டி வச்சி கூட்டி வரேன் நு சொல்லிட்டு, அப்புறம் 10 மணிக்கு, கதிர் அவர்கள் வந்தார். முதல் முறை சந்திப்பு, மன்னிப்புடன் தொடங்கியது.  உயிரோட்டமான பதிவுகளின் சொந்தகாரர்,  இவ்ளோ நடந்தும், நான் சிறு நெருடலுடன் இருக்க, மெலிதான சிரிப்புடன் இயல்பாக இருந்தார். வேறு யாராக  இருந்தாலும், இவ்ளோ பெருந்தன்மையும், பொறுமையும், பக்குவமும்  இருக்குமா னு தெரியல. ஏன் நானே அப்டி இருக்க மாட்டேன்.  வந்தார், தொடங்கினார், நான் பெரிய ஆள் எல்லாம் இல்ல,  உங்கள மாதிரி ஒருத்தன், விவசாயம் பண்றேன், உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்யாசம் ஏதும் இல்ல, வயசு வித்யாசம் தவற, னு ஆரம்பிச்சி, எவளோ விஷயங்கள், எல்லோரையும் கொஞ்ச நேரத்துல, தன் வசம் கொண்டு வந்துவிட்டார். எப்படி அவர் எழுத்த வாசிக்கும் பொது, ஒரு உயிரோட்டம் இருக்கோமோ, பேச்சுலயும் அதே. மனச கிளறி, சிந்திக்க வச்சி, எங்கள் மாணவர்கள் தயக்கம் இன்றி தங்கள் கருத்துகளை பகிர்ந்த போது, நான்  அசந்து போனது நிஜம். அடுத்து அடுத்து இரண்டு பள்ளிகளில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களிடம் கருத்து பகிர்வு. 10 மணி முதல் 5 மணி வரை என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார். ஏதோ பக்கத்துக்கு வீடு அண்ணன் பேசுவது போல தான் அந்த மாணவர்களிடம் பேசினார். ஒவ்வொரு இடத்திலும் அவர் அந்த மாணவர்களின் தன்மைக்கு ஏற்ப உரை நிகழ்த்தினார். கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்ல, கல்வி யை வரமாய் எடுத்து கொள் என்பதே சாரம்சம். தலைமை ஆசிரியர்கு அவ்ளோ மகிழ்ச்சி. இந்த மாதிரி இது வர எங்க பள்ளில பசங்களுக்கு னு நாங்க யாரையும் அழைச்சி வந்து பேச வச்சது னு இல்லைன்னு ரொம்ப நெகிழ்வாய் சொன்னார். மிகவும் அருமையான  தினமாய், மன நிறைவுடன், மறக்க முடியாத நாளாய் நேற்று இருந்தது.

No comments:

Post a Comment